உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பற்ற பூங்காவால் ஒப்பந்ததாரருக்கு அபராதம்

பராமரிப்பற்ற பூங்காவால் ஒப்பந்ததாரருக்கு அபராதம்

கோவை;துடியலுார் அருகே மாநகராட்சி பூங்காவை, பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். துடியலுார் அருகே மாநகராட்சி, 1வது வார்டு எஸ்.பி.நகரில் உள்ள பூங்காவில் ஆய்வு செய்தபோது, பராமரிப்பின்றி இருந்தது தெரியவந்தது.இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கி, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்க கமிஷனர் உத்தரவிட்டார். மாநகர பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி