உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடல் பலம், மன பலம் முக்கியமான ஒன்று

உடல் பலம், மன பலம் முக்கியமான ஒன்று

மேட்டுப்பாளையம்: காரமடை டாக்டர் ஆர்.வி.கலை, அறிவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., சார்பில், காரமடை அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினக்கூட்டம் நடந்தது. மருத்துவர் சவுமியா பேசுகையில், ''இன்றைய காலகட்டத்தில், பெண்கள் பல சவால்களை எதிர்கொள்ள, உடல் பலமும், மன பலமும் அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பதும், மொபைல் போன் உபயோகத்தை தவிர்த்து சரியான நேரத்தில் உறங்குவதும், சரியான உணவு உட்கொள்வதும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் முக்கியம்,'' என்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி, கல்லுாரி முதல்வர் ரூபா பேசினர். கல்லுாரியின் கணிதவியல் துறை தலைவரும், என்.எஸ்.எஸ்., அலுவலருமான உமா பிரியா உட்பட மாணவியர் பங்கேற்றனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ