பொள்ளாச்சி:பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வுகள் மிகவும் எளிமையாக இருந்ததாக, மாணவியர் தெரிவித்தனர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 37 மையங்களில் நேற்று நடந்தது.மாணவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், சிறப்பு தமிழ் மனையியல், புள்ளியியல் தேர்வுகளை எதிர்கொண்டனர்.அதன்படி, கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வை, 1,762 மாணவர்கள், 1,752 மாணவியர் என, 3,514 பேர் எழுதினர். 9 மாணவர்கள், 7 மாணவியர் என, 16 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர்.கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வை, 1,325 மாணவர்கள், 1,328 மாணவியர் என, 2,653 பேர் எழுதினர். அதேநேரம், 18 மாணவர்கள், 18 மாணவியர் என, 36 பேர் தேர்வு எழுதவில்லை.தேர்வு குறித்து, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் கூறியதாவது:பாவனா: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. தீவிர பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் நல்ல முறையில் விடை எழுதினேன். கட்டாய வினாக்களும் மிகவும் எளிதான முறையில் கேட்கப்பட்டிருந்தது. சந்தேகம் இல்லாமல், நுாறு மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.ரூபாஸ்ரீ: கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் அனைத்து பகுதிகளும் மிகவும் எளிமையாக இருந்தது. குறிப்பாக, ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததால் விரைந்து தேர்வை எழுதினேன். ஆசிரியர்கள் போதிய பயிற்சி அளித்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதியுள்ளேன். நுாறு மதிப்பெண்கள் கிடைக்கும்.பொள்ளாச்சி கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கூறியதாவது:தயப்பாத்திமா: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் நான்கு அக வினாவாக இருந்தது. ஏற்கனவே பயிற்சி எடுத்திருந்ததால் கட்டாய வினா, இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்களுக்களுக்கு எளிதாக பதில் எழுத முடிந்தது. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.ஸ்ரீநிதி: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு ரொம்ப ஈசியாக இருந்தது. அகவினாக்கள் மிக எளிதாக இருந்தது. அதனால், குறைவான நேரத்தில் தேர்வு எழுதினேன். இதேபோல, ஐந்து மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் பின்னால் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளதால் முழு மதிப்பெண் கிடைக்கும்.சுரேகா: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. கட்டாய வினாக்கள் புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்கள், கட்டாய வினாக்கள், ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு உண்டான பதிலை விரைந்து எழுதினேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும். உடுமலை
பிளஸ் 1 பொதுத்தேர்வு உடுமலை கோட்டத்தில் 18 மையங்களில் நடந்தது. நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வுகள் நடந்தது.மாணவர்கள் கூறியதாவது:வழக்கமாகவே கம்ப்யூட்டர் தேர்வுகள் எளிமையாக இருக்கும். பொதுத்தேர்விலும் அவ்வாறு ஈஸியான வினாக்களாக வந்திருந்தது.பலமுறை பயிற்சி செய்த, அதிகம் பரீட்சயமான வினாக்களாகவும் வந்ததால் மிக விரைவில் விடைகளை எழுத முடிந்தது.அலகுத்தேர்வு, திருப்புதல் தேர்வுகள், அரையாண்டு தேர்வுகளில் வந்த வினாக்களும் கேட்கப்பட்டன. இதனால் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறும் வகையில்தான் இருந்தது. சுலபமான வினாத்தாளாக இருந்தது.இவ்வாறு மாணவர்கள் கூறினர்.