| ADDED : பிப் 22, 2024 10:50 PM
நெகமம்:நெகமம், கப்பளாங்கரை பரமசிவன் கோவில் திருவிழாவில், மூதாட்டியிடம் நகை பறித்தது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.நெகமம், கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில், கடந்த வாரம் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில், கப்பளாங்கரையை சேர்ந்த வள்ளியம்மாள், 75, பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.கும்பாபிேஷக விழா நெரிசலில், அவர் அணிந்திருந்த, 4.5 பவுன் நகை காணாமல் போயுள்ளது. வீட்டிற்கு சென்ற பின், கழுத்தில் நகை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மாள், வீட்டில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார்.அதன்பின், நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கும்பாபிேஷக விழா வீடியோ காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கோவில் திருவிழாக்களில், பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை குறி வைத்து திருடும் கும்பல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.