உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகளால் வீடு சேதம் :தொழிலாளிக்கு நிவாரணம்

யானைகளால் வீடு சேதம் :தொழிலாளிக்கு நிவாரணம்

வால்பாறை:தொழிலாளியின் வீட்டை யானைகள் சேதப்படுத்தியதை தொடர்ந்து, வால்பாறை எம்.எல்.ஏ.,பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை வழங்கினார்.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டம். இங்குள்ள லாசன் கோட்டம் பெரியகல்லார் எஸ்டேட் பகுதியில் கடந்த, 14ம் தேதிநள்ளிரவு 3:00 மணிக்கு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மூன்று யானைகள்மூன்று தொழிலாளர்களின் வீடுகளைஇடித்து சேதப்படுத்தின. இந்த சம்பவத்தில்தம்பிராஜ் என்ற தொழிலாளியின் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், லேப்டாப், 'டிவி', உள்ளிட்ட பொருட்களை யானைகள் சேதபடுத்தின. சம்பவ இடத்திற்கு நேற்று காலை சென்ற வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி, யானைகளால் வீடு இழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு, ஐந்து ஆயிரம் நிவாரணத்தொகையாக வழங்கினார்.அவருடன் வால்பாறை அ.தி.மு.க., நகரச்செயலாளர் மயில்கணேஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ