உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயனற்று கிடக்கும் வாகனங்கள்; அப்புறப்படுத்த வேண்டுகோள்

பயனற்று கிடக்கும் வாகனங்கள்; அப்புறப்படுத்த வேண்டுகோள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், பழைய குடிமைப்பொருள் வழங்கல் அலுவலக வளாகத்தில், பயனற்று கிடக்கும் கழிவு வாகனங்களை, அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி தாலுகாவில், சட்ட விரோதமாக அரிசி கடத்தல் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் பயன்படுத்திய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதேபோல, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதோடு, கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்களையும் குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.இதுபோன்று, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், லாரி, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள், பழைய குடிமைப் பொருள் வழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.உரிமை கோரப்படாத வாகனங்கள், போதிய பாதுகாப்பின்றி உள்ளன. அவை, மழை, வெயிலுக்கு தாக்குப் பிடிக்காமல், பயனற்று காணப்படுகின்றன. இந்த வளாகத்தில், கிளைச்சிறை, தாலுகா போலீஸ் ஸ்டேஷன், கருவூலகம் போன்றவை உள்ள நிலையில், வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அரசு அலுவலர்கள் கூறுகையில், 'பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தினால், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த முடியும். துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ