உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுத்தை சிக்காததால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல அச்சம்

சிறுத்தை சிக்காததால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல அச்சம்

மேட்டுப்பாளையம்:சிறுமுகையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல், சிறுத்தை போக்குகாட்டி வருவதால், வனத்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே சென்னாமலை கரட்டில் கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டின் முன் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த, கன்றுக்குட்டியை சிறுத்தை ஒன்று தாக்கி கொன்றது. இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டில் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வந்தது. பின்னர் கூண்டு இடமாற்றம் செய்யப்பட்டது.கூண்டில் ஆடு ஒன்று நிறுத்திவைக்கப்பட்டு, அதற்கு தீவனம் கொடுத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். ஆடு சத்தம் கேட்டால் சிறுத்தை வரும் என்பதால், இரவு நேரத்தில் கூண்டின் அருகே யாரும் செல்லாமல், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனாலும் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், இத்தனை முயற்சிகள் மேற்கொண்டும், சிறுத்தை சிக்கவில்லை என்பதால், மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம். எனினும் தொடர்ந்து அடுத்த கட்ட முயற்சிகளை மேற்கொள்வோம். இறைச்சி துண்டுகளை கூண்டுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வீசி சிறுத்தையை பிடிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் மிகவும் அச்சமடைந்துள்ளனர். மேய்ச்சலுக்கு ஆடு, மாடு போன்றவைகளை அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, இப்பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது. விவசாய பணிகளுக்கும் ஆட்கள் வர தயங்குகின்றனர். சிறுத்தையை பிடிக்க வேண்டும், இல்லை என்றால் சிறுத்தை வேறு பகுதிக்கு சென்றுவிட்டதா என்ற தகவலை உறுதிப்படுத்தி, வனத்துறையினர் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

DARMHAR/ D.M.Reddy
மார் 21, 2024 03:37

சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் மிகவும் அச்சமடைந்துள்ளனர். மேய்ச்சலுக்அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதென்றால் காட்டு பன்றிகளை விடலாமே.


jayvee
மார் 20, 2024 19:48

விழுப்புரம் மற்றும் சிதம்பரத்திலும் இதே பிரச்சனைதானாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை