மேலும் செய்திகள்
மாநகராட்சி பெண்கள் பள்ளியில் வர்ணம் விழா கொண்டாட்டம்
17 minutes ago
வெங்கடாசலபதி நகரை காப்பாற்று பெருமாளே!
33 minutes ago
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில், அரசு மாணவர் விடுதிக்கு நிரந்தர காப்பாளர் நியமிக்கப்படாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. தொண்டாமுத்தூரில், 2005ம் ஆண்டு, அரசு மாணவர் விடுதி துவங்கப்பட்டது. 55 பேர் தங்கியுள்ளனர். விடுதிக்காப்பாளராக இருந்த ரவிச்சந்திரன், ஜூலையில் பணி மாறுதல் பெற்றுச்சென்ற பின், சிங்காநல்லூர் அரசு சமூக நல விடுதி காப்பாளர் மயில்சாமி, கூடுதல் பொறுப்பில் கவனித்து வருகிறார். இரு விடுதிகளையும் ஒரே காப்பாளர் கவனித்து வருவதால், ஏதேனும் ஒரு விடுதியில் மட்டுமே இரவு நேரத்தில், காப்பாளர் இருக்க முடியும். இதனால், இரவில் மாணவர்களை கண்காணிப்பதும், பாதுகாப்பு அளிப்பதும் முடிவதில்லை. எனவே, தொண்டாமுத்தூர் அரசு மாணவர்கள் விடுதிக்கு, தனியாக ஒரு விடுதி காப்பாளர் நியமிக்க வேண்டும் என, மாணவர்களும் பெற்றோரும் விரும்புகின்றனர்.
17 minutes ago
33 minutes ago