உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீரில் கலக்குது கழிவுநீர்; மக்கள் காத்திருப்பு போராட்டம்

குடிநீரில் கலக்குது கழிவுநீர்; மக்கள் காத்திருப்பு போராட்டம்

அன்னுார்; குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது என புகார் கூறி, பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்னுார் பேரூராட்சியில், சத்தி சாலையில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்தது. கட்டபொம்மன் நகரில் மின்மோட்டார் பழுதாகி இரண்டு வாரங்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் கட்டபொம்மன் நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் மணிகண்டனுடன் சேர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார அலுவலர் ராஜ்குமார், எழுத்தர் அருண்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'பழுதான மின்மோட்டார் உடனடியாக சரி செய்யப்படும். நாளை (இன்று) கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என உறுதி அளித்தனர். இதையடுத்து ஒன்றரை மணி நேர காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ