உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், திடக்கழிவு மேலாண்மை திட்டம், 26ன்படி பொதுமக்களிடம் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வாங்க வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுவர்களில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்கள் வரைந்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை மற்றும் சிறப்பு குப்பை என நான்கு வகைகளாக தரம் பிரித்து கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி