உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பள்ளி ஆண்டு விழாவில்  மாணவர்களுக்கு கவுரவம்

 பள்ளி ஆண்டு விழாவில்  மாணவர்களுக்கு கவுரவம்

கோவை: பன்னீர்மடை அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியின் நான்காம் ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக, முன்னாள் அண்ணா பல்கலை துணைவேந்தர் பாலகுருசாமி பங்கேற்றார். நீட் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் பயின்று வரும், 32க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்களை பாராட்டி, காசோலைகளையும் கேடயங்களையும் வழங்கி கவுரவித்தார். கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பிளஸ்2 வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் கவுரவிக்கப்பட்டனர். மழலையர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு கருப்பொருளில் மாணவர்கள் நடனங்களை நிகழ்த்தினர். பல்வேறு மொழிகளில் நாடகங்களையும் அரங்கேற்றினர். பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், முதல்வர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை