உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்றக்கூடாது

போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்றக்கூடாது

போத்தனுார்;போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் பெயரை மாற்றக்கூடாது என, போத்தனுார் ரயில் பயனர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, போத்தனூர் ரயில் பயனர்கள் சங்க பொது செயலாளர் சுப்ரமணியன் அறிக்கை:போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன், 1862-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். பழமை வாய்ந்த இந்த ரயில்வே ஸ்டேஷனின் பெயரை மாற்ற, ஒரு சிலர் தொழில் அமைப்புகள் பெயரில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்று, அரசு பெயர் மாற்றம் செய்யக்கூடாது.பெயர் மாற்ற அரசு முடிவு செய்தால், போத்தனுார் பகுதி மக்களிடமும், எங்கள் அமைப்பிடமும் கருத்து கேட்க வேண்டும்.இந்த ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தும் பணி நடந்து வரும் நேரத்தில் பெயர் மாற்றம் குறித்து, சிலர் குழப்பம் ஏற்படுத்துவது முறையல்ல.இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிக்கும், தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். ஆதலால் எக்காரணம் கொண்டும் பெயர் மாற்றும் கோரிக்கையை, அரசு ஏற்கக் கூடாது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை