உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குருந்தமலையில் தைப்பூச தேரோட்டம்: தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

குருந்தமலையில் தைப்பூச தேரோட்டம்: தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்

மேட்டுப்பாளையம்:குருந்தமலையில், தைப்பூச தேர்த்திருவிழாவின் போது, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.காரமடை அருகே குருந்தமலையில் மிகவும் பழமையான, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில், தைப்பூச விழாவில், புதிதாக செய்த தேரோட்டம், இம்மாதம் 25ம் தேதி நடைபெற உள்ளது.தைப்பூச விழா வருகிற, 18ம் தேதி கிராம சாந்தி, 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 23ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 23ம் தேதி இரவு வள்ளி மலையில் இருந்து, அம்மன் அழைப்பும், 24ம் தேதி காலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 25ம் தேதி காலை, 5:50 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுத சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார்.அதைத் தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு புதிய தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. 27ம் தேதி தெப்பத் திருவிழாவும், 28ம் தேதி சந்தன காப்பு உற்சவமும் நடைபெற உள்ளது. தைப்பூச புதிய தேர் திருவிழாவை முன்னிட்டு, அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், கோவிலில் நடந்தது.நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் வனிதா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஹேமலதா வரவேற்றார். தாசில்தார் சந்திரன், தீயணைப்பு அலுவலர் பாலசுந்தரம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி லூர்து இயேசு, மின்வாரிய உதவி மின் பொறியாளர் சுகுமார், சுகாதார ஆய்வாளர் திருஞானம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், போலீசார் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.கோவில் வளாகம் மற்றும் மலையை சுற்றியும், சுத்தம் செய்து, குளோரின் பவுடர் தெளிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர் வரும் சாலையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சீர் செய்ய வேண்டும். பக்தர்கள் தேர்த்திருவிழாவை கண்டுகளிக்க, கோவிலுக்கு வந்து செல்ல, அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். கோவில் வளாகத்திலும், கோவிலை சுற்றிலும் பக்தர்கள் இரவு பகலாக தங்கி இருப்பர். அதனால், 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.தீயணைப்பு துறையினர் கோவில் வளாகத்தில் தற்காலிக முகாம் அமைத்து, தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முதலுதவி மையம் அமைத்து, தேவையான மருந்து, மாத்திரைகளை பக்தர்களுக்கு வழங்க, தயார் நிலையில் வைக்க வேண்டும். ோவிலை சுற்றி அதிகமான குரங்குகள் உள்ளதால், வனத்துறை குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வனத்துறை வனக்காப்பாளர் முனுசாமி, தேக்கம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கராஜ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை