உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலை சேதப்படுத்திய யானைகள் விரட்டியடிப்பு

கோவிலை சேதப்படுத்திய யானைகள் விரட்டியடிப்பு

வால்பாறை,- வால்பாறை அருகே, கோவிலை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட். இங்குள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்த யானைகள், கோவிலின் முகப்பு வாயில் தடுப்புக்கம்பியை சேதப்படுத்தின.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானைகளை அங்கிருந்து விரட்டினர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் யானைகள் முகாமிட்டுள்ளதால், யானைகளால் ஏற்படும் சேதங்களை தடுக்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை