மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
12 hour(s) ago
நாளைய மின்தடை
12 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
12 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
12 hour(s) ago
தொண்டாமுத்தூர்:நல்லூர்வயலில் உள்ள மலைவாழ் மக்களின் குலதெய்வ கோவிலில், அம்மன் சிலை சேதமடைந்ததை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் பார்வையிட்டார்.நல்லூர் வயல்பதி மக்களின் குலதெய்வ கோவிலான, சடையாண்டியப்பன் கோவில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், உள்ள அம்மன் சிலையை, மூன்றாவது முறையாக, கடந்த வாரம், மர்மநபர்கள் சேதப்படுத்தி சென்றனர். இந்து முன்னணியினர், அளித்த புகாரின்படி, காருண்யா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று, அக்கோவிலில், சிலை சேதமடைந்ததை நேரில் பார்வையிட்டார். அதன்பின், சேதமடைந்த அம்மன் சிலைக்கு பதிலாகவும், திருடுபோன கருப்பராயன் சிலைக்கு பதிலாகவும், தனது சொந்த செலவில், புதிய சிலை வழங்குவதாகவும், தனியார் மூலம் கோவிலை சுற்றி கம்பிவேலி அமைத்து தருவதாகவும் தெரிவித்தார். இந்து அமைப்பினர் உடன் இருந்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago