உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழனி ஆண்டவர் கோவில் இன்று முதலாம் ஆண்டு விழா

பழனி ஆண்டவர் கோவில் இன்று முதலாம் ஆண்டு விழா

அன்னுார்:அன்னுார் அருகே சாலையூர் பழனி ஆண்டவர் கோவில் முதலாம் ஆண்டு விழா இன்று (22ம் தேதி) நடக்கிறது.சாலையூரில் 1,000 ஆண்டுகள் பழமையான, சித்தர்கள் வழிபாடு செய்த, பழனி ஆண்டவர் கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து முதலாம் ஆண்டு பெருவிழா இன்று நடக்கிறது.இன்று காலை 9:00 மணிக்கு, வேள்வி வழிபாடும், 10:30 மணிக்கு மகா அபிஷேகமும், இதையடுத்து நீராட்டுதலும், அலங்கார பூஜையும், பேரொளி வழிபாடும் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் கும்மியாட்டம் நடக்கிறது.சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் அருளுரை வழங்குகின்றனர். பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ