உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில் இருவர் காயம்

விபத்தில் இருவர் காயம்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, நெகமத்தில் நடந்த வாகன விபத்துகளில் இருவர் காயமடைந்தனர்.நெகமம் அருகே உள்ள, செங்குட்டைபாளையம் கடை வீதி அருகே, ரோட்டோரத்தில் பாப்பன், 70, என்பவர் நடந்து சென்றார். அப்போது பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியை சேர்ந்த கஜேந்திரகுமார், ஓட்டி வந்த பைக் பாப்பான் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த பாப்பானை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து பற்றி நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.* கிணத்துக்கடவு, தாமரைகுளம் பகுதியில் செங்குட்டைபாளையத்தை சேர்ந்த மோகனசுந்தரம், 55, அவரது அண்ணன் ராமலிங்கம், 63, ஆகியோர் பைக்கில் சென்றனர். அப்போது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. விபத்தில் ராமலிங்கம் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை