உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கஞ்சா கடத்தல் வழக்கில்   பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

 கஞ்சா கடத்தல் வழக்கில்   பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

கோவை: கோவை போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், 2021 மார்ச், 30ல், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனை நடத்தினர். ஈரோடு மாவட்டம், கள்ளுக்கடை மேடு, காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆனந்தி,39, என்பவரை பிடித்து சோதனையிட்டபோது, அவர் வைத்திருந்த துணி பையில் இரண்டு கிலோ கஞ்சா இருந்தது. இது தொடர்பாக ஆனந்தியை கைது செய்தனர். அவர் மீது, கோவை போதைபொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், ஆனந்திக்கு, நான்காண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார். கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்று, அவரும் தற்கொலை செய்ய முயன்ற வழக்கில், ஆனந்திக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை