உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுபானம் விற்ற தொழிலாளி கைது

மதுபானம் விற்ற தொழிலாளி கைது

நெகமம்:நெகமம் அருகே, மது பானம் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற, கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.நெகமம், வடசித்துார் டாஸ்மாக் மதுக்கடை அருகே, மது பானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து போலீசார் வடசித்துார் டாஸ்மாக் மதுக்கடை அருகே சோதனை செய்ததில், தேவகோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவிச்சந்திரன், 56, என்பவர், மது விற்பனை செய்தது உறுதியானது. இதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், 12 மது பாட்டில்கள் மற்றும் 990 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி