உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விபத்தில் வாலிபர் மரணம் : உடல் உறுப்புகள் தானம்

 விபத்தில் வாலிபர் மரணம் : உடல் உறுப்புகள் தானம்

கோவை: பொள்ளாச்சி திப்பம்பட்டியை சேர்ந்தவர் பிரேம்குமார், 19. கடந்த, 22ம் தேதி சாலை விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், தானமாக வழங்கப்பட்டன. பிரேம்குமாரின் சடலத்துக்கு, மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணப்பிரியா உள்ளிட்டோர், மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை