உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனு நீதி நாள் முகாம்

மனு நீதி நாள் முகாம்

விருத்தாசலம் : சி.கீரனூர் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. விருத்தாசலம் அடுத்த சி.கீரனூரில் நடந்த மனு நீதி நாள் முகாமிற்கு ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் உஷாராணி வரவேற்றார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். 11 பேருக்கு பட்டா, 45 பேருக்கு ஆதிதிராவிடர்களுக்கான இலவச மனைப்பட்டா, 7 பேருக்கு விதவை உதவித் தொகை, 10 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. தாசில்தார் சரவணன், துணை தாசில்தார்கள் இருதயமேரி, வேலு, மெகருனிசா, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வேல்விழி, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் செல்வராசு, கார்மாங்குடி வெங்கடேசன், வி.ஏ.ஓ., சிவலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை