உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் மது பதுக்கி விற்ற இருவர் கைது

டாஸ்மாக் மது பதுக்கி விற்ற இருவர் கைது

பெண்ணாடம் : இருவேறு இடங்களில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற மூதாட்டி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று காலை கோவிலுாரில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி, 42, என்பவர் தனது வீட்டில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்த 14 மதுபாட்டில்கள், ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதேபோன்று, சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் முருகன்குடியில் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மாரியம்மாள், 70, என்பவர் கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து அவரிடமிருந்த 2 மதுபாட்டில்கள் மற்றும் 600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி