உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் கவிழ்ந்து 3 பேர் பலி; ஐவர் படுகாயம்

கார் கவிழ்ந்து 3 பேர் பலி; ஐவர் படுகாயம்

திட்டக்குடி:தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் தாலுகா, ரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி ரேகா, 36; தனியார் நிறுவன மேலாளர். இவர், தன் மகள்கள் நந்தனா, 13, மிருதுளா, 8, சகோதரி இந்துமதி, 38, அவரது மகள் மகாலட்சுமி, 14, தோழி தெரசா டெல்பின், 22, அவரது இரண்டரை வயது மகள் ஹெலன் ஆகியோருடன், புதுச்சேரி சுற்றுலா செல்ல திட்டமிட்டார்.நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு திருச்சியில் இருந்து, 'இனோவா' காரில் புறப்பட்டனர். காரை புதுச்சேரியைச் சேர்ந்த பிரவின்குமார், 40, காரை ஓட்டினார்.இரவு 10:15 மணிக்கு கடலுார் மாவட்டம், ராமநத்தம் எழுத்துார் தனியார் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக் குப்புறக் கவிழ்ந்தது. ராமநத்தம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், இடிபாட்டில் சிக்கியவர்களை மீட்டனர். இந்துமதி, நந்தனா, பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த மற்றவர்கள் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை