பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்பட்ட அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தை, காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன்பிடி இறங்குதளம் உள்ளது. இங்கு, கூடுதல் வசதிகள் செய்துத்தர மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மீன்வளத்துறை சார்பில், ரூ.10 கோடி மதிப்பில் படகு அணையும் சுவர், கேபியான் கட்டமைப்பு, சிமெண்ட் சாலைவசதி, ஆழப்படுத்துதல் பணி உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.துறைமுகம் நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைதொடர்ந்து,பரங்கிப்பேட்டையில் நடந்த விழாவிற்கு, பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் குத்துவிளக்கேற்றி வைத்தார். துணை சேர்மன் முகமது யூனுஸ், செயல் அலுவலர் திருமூர்த்தி, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், கவுன்சிலர்கள் செழியன், ஜாபர்ஷெரீப், தையல்நாயகி கணேசமூர்த்தி, ராஜேஸ்வரி வேல்முருகன்,ராஜகுமாரி மாரியப்பன், முன்னாள் நகர செயலாளர் பாண்டியன், புருஷோத்தமன், படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் கண்ணன், கிராம தலைவர் பக்கிரிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.