உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துறவி லட்சுமிபாய் கோவிலில் குரு பூஜை

துறவி லட்சுமிபாய் கோவிலில் குரு பூஜை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஆனையாங்குப்பம் ஓங்கார ஆசிரமத்தில் உள்ள துறவி லட்சுமிபாய் அதிஷ்டான கோவிலில் நேற்று மஹா குரு பூஜை விழா நடந்தது.அதையொட்டி நேற்று அதிகாலை 3:10 மணிக்கு, மகரஜோதி தரிசனமும், 4:00 மணிக்கு, துறவி லட்சுமி பாய் அதிஷ்டானம் பள்ளி எழுச்சியும், காலை 6:00 மணிக்கு சகஸ்ர லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து, சுவாமி ஓங்காரனந்தா, பொதுமக்களுக்கு, ஆசி வழங்கி அவர் எழுதிய 'வா போகலாம்' என்ற 105வது புத்தகம் வெளியிட்டதை, ஓங்கார ஆசிரமம் துணை தலைவர் குமாரராகவன் பெற்றுக்கொண்டார்.விழாவில், சுவாமி கோடீஸ்வரானந்தா, ஓம் ஞானேஸ்வரி, கல்யாணி குருமூர்த்தி, ஷோபனா, கருணாகரன், பிரேமலதா, தேவி, வழக்கறிஞர் நீதிகுமார், உலகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை