உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி

பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி

கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்க கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது.மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, சங்க உறுப்பினர்களுக்கு தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கங்கள் வழங்கினார். கிளை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஸ்ரீரகு புத்தாண்டு பஞ்சாங்கத்தின் ஆண்டு பலன்கள் குறித்து விளக்கவுரையாற்றினார். கடலுார் சங்கர மட செயலாளர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.அப்போது, மோகன கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். சங்க உறுப்பினர் ராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி