உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறில் முதியவர் அடித்து கொலை

முன்விரோத தகராறில் முதியவர் அடித்து கொலை

விருத்தாசலம்,:கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த தர்மநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் அருள் வீரபாண்டியன், 42. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நிர்மல்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டதில், நிர்மல்குமார், சகோதரர் நிதிஷ்குமார், தந்தை ஜெயக்குமார், தாய் செல்வராணி ஆகியோர், அருள் வீரபாண்டியனை திட்டி தாக்கினர். தடுக்க முயன்ற அவரது தந்தை வடிவேல், 70, என்பவரையும் தாக்கினர்.மயங்கி விழுந்த வடிவேலுவை, கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நிர்மல்குமார் நிதிஷ்குமார், ஜெயக்குமார், செல்வராணி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை