உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் மாணவிகளின் மதிப்பீடு வரைபட நிகழ்ச்சி

வேளாண் மாணவிகளின் மதிப்பீடு வரைபட நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் வேளாண் மாணவிகளின் கிராமப்புற மதிப்பீடு வரைபட நிகழ்ச்சி நடந்தது.திருச்சி தோட்டக்கலை கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி ஊரக பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.அவர்கள், புதுக்கூரைப்பேட்டை அரசு பள்ளி வளாகத்தில், கிராமப்புற மதிப்பீடு வரைபட நிகழ்ச்சி நடத்தினர்.அதில், கிராம வள வரைபடம், சமூக வரைபடம், பகுப்பாய்வு, தரவரிசை விளக்கம், தினசரி கால அட்டவணை உள்ளிட்டவற்றை படமாக வரைந்து கிராம மக்களுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை