உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முடப்பள்ளி கிராமத்தில் வானியல் நிகழ்ச்சி

முடப்பள்ளி கிராமத்தில் வானியல் நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு மற்றும் முடப்பள்ளி கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், வானவியல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் மாவட்ட அறிவியல் இயக்க துணைத் தலைவர் தனலட்சுமி கலந்துகொண்டு, அமாவாசை,பவுர்ணமி எப்படி வருகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி. நிலவில் நடந்து வரும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற அறிவியல் உண்மைகளை விளக்கி பேசினார். இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு, தொலைநோக்கி மூலம் வானியல் நிகழ்வுகளை கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை