உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறையில் கஞ்சா வீச்சு: போலீஸ் விசாரணை 

சிறையில் கஞ்சா வீச்சு: போலீஸ் விசாரணை 

கடலுார்: கடலுார் மத்திய சிறை வளாகத்தில் கஞ்சா வீசிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மத்திய சிறையின் வெளிப்புற பகுதியில் குடிநீர் தொட்டி அருகில் சிறைக்காவலர்கள் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறை வளாகத்தின் வெளியே சுற்றச்சுவர் அருகில் கருப்பு கலர் டேப் சுற்றப்பட்ட பாலித்தீன் கவர் ஒன்று கிடப்பதை கண்டுபிடித்தனர். இதை சிறைக் காவலர்கள் எடுத்து பிரித்து பார்த்த போது, 35 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது.இதுகுறித்து சிறை அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து கஞ்சா வீசிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை