உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு : பாலுார் கடைவீதியில் அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.பண்ருட்டி அடுத்த பாலுார் கடைவீதியில் போட்டி போட்டுக்கொண்டு அரசியல் கட்சி மற்றும் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து வந்தனர். இதனால் அங்கு பஸ் ஏற காத்திருக்கும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருந்த வந்தது.இதனால் நடுவீரப்பட்டு போலீசார் அனுமதியின்றி பேனர் வைக்ககூடாது என எச்சரிக்கை பலகை வைத்தனர்.இதனால் கடந்த ஒரு மாதமாக யாரும் அங்கு பேனர் வைக்கவில்லை. இந்நிலையில் பாலுார் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த உமாபதி,31; தமது உறவினர் இறந்ததற்கான பேனர் வைத்திருந்தார்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் உமாபதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ