உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தட்டை ஊராட்சியில் முதல்வர் திட்ட முகாம்

கொத்தட்டை ஊராட்சியில் முதல்வர் திட்ட முகாம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.புவனகிரி தாசில்தார் தனபதி தலைமை தாங்கினார். கொத்தட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி வரவேற்றார். பி.டி.ஓ., க்கள் சதீஷ்குமார், ரேவதி முன்னிலை வகித்தனர். மக்களுடன் முதல்வர் திட்டத்தை, பரங்கிப்பேட்டை சேர்மன் கருணாநிதி துவக்கி வைத்தார்.முகாமில் கொத்தட்டை, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, அரியகோஷ்டி, சின்னுார் புதுப்பேட்டை ஊராட்சிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச பட்டா, பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவி தொகை, புதிய வீடுகள் கேட்டு மனு அளித்தனர்.நிகழ்ச்சியில் துணை சேர்மன் மோகனசுந்தரம், ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா, சமூக ஆர்வலர் ராஜலிங்க தேவன், துணை பி.டி.ஓ., அலெக்சாண்டர், சுகாதார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ஊராட்சி தலைவர்கள் கோமதி, மரகதம், சித்ரா, பேராசிரியர் ரெங்கசாமி மற்றும் 18 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை