உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம்; ஜே.எம்.மருத்துவமனை குழுமம் ஒப்படைப்பு

அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம்; ஜே.எம்.மருத்துவமனை குழுமம் ஒப்படைப்பு

திட்டக்குடி : திட்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜே.எம்.,மருத்துவமனை குழுமம் சார்பில் கட்டப்பட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 வகுப்பறை கட்டடம், பள்ளிக்கு ஒப்படைக்கப்பட்டது.புதிய கட்டடத்தை பள்ளியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் விருத்தாசலம் மாவட்ட தலைவர் ராஜன் மற்றும் ஜே.எம்., மருத்துவமனை குழுமத் தலைவர் டாக்டர் முல்லைநாதன் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கரிடம் கட்டடத்தின் சாவியை ஒப்படைத்தனர்.முன்னாள் பேரூராட்சி சேர்மன் மன்னன், முன்னாள் கவுன்சிலர்கள் வளையாபதி, இளங்கோவன் உடனிருந்தனர்.அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக கட்டடத்தை வழங்கிய டாக்டர் முல்லைநாதன், டாக்டர்கள் ஜோதி, கார்த்திகேயன், புவனி அனுரேகா ஆகியோருக்கு, திட்டக்குடி நகர அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை