உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீடு கட்டும் திட்ட பயனாளிகள் தேர்வு நெல்லிக்குப்பத்தில் கலெக்டர் ஆய்வு

வீடு கட்டும் திட்ட பயனாளிகள் தேர்வு நெல்லிக்குப்பத்தில் கலெக்டர் ஆய்வு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட பயனாளிகள் தேர்வை, கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.தமிழக அரசு சார்பில் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 360 சதுர அடியில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டி தர முடிவு செய்துள்ளனர். இத்திட்டத்திதல் கடலுார் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3,500 வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது.நெல்லிக்குப்பம் அருகே வரக்கால்பட்டு ஊராட்சியில் பயனாளிகள் தேர்வை, கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது, பாரபட்சமின்றி தகுதியுடைய நபர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். முறைகேடுகள் நடக்காமல் பார்த்து கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறை வழங்கினார். கூடுதல் கலெக்டர் சரண்யா உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி