வடலுார் : ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட காங்., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலுாரில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் நாதன் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்ட தலைவர் திலகர் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் தலைவர் அழகிரி, கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் தமிழ்நாடு காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன்,சட்டசபை காங்., கட்சி தலைவர் ராஜேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கலைச்செல்வன், ரங்க மணி, மாநிலத் துணைத் தலைவர் மணிரத்னம், செல்வம், சேதுராமன், மாநில இளைஞர் காங்., தலைவர் லெனின் பிரசாத், மாவட்ட தலைவர் கலையரசன் மாவட்ட மாநில செயலாளர் அன்பரசு,ராகுல் பேரவை மாநில தலைவர் சிவகுமார், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொதுசெயலாளர் சாந்திராஜ், வழக்கறிஞர்கள் செங்கணேி, சம்பத்குமார், ராகுல் பேரவை முகம்மது இக்பால், இளைஞர் காங்., ரஞ்சித், களையூர் சுரேஷ், சுகுதேவ், மாவட்ட செயலாளர் செல்வகுமார், நகர செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார.