| ADDED : மே 06, 2024 06:07 AM
வடலுார் : வடலுார் ஓ.பி.ஆர்., கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., மற்றும் எம்.எட்., முடித்த 355 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.வடலுார் ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனத்தில் உள்ள மகாலிங்கம் கலை அரங்கில் நடந்த விழாவிற்கு கல்வி நிறுவனத்தின் தாளாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.நிர்வாக அலுவலர் லதா ராஜா வெங்கடேசன் வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் பொன்மொழி அறிக்கை வாசித்தார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பஞ்சநாதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.எட்., மற்றும் எம்.எட் முடித்த 355 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். நம்முடன் படித்தவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே பி.எட், எம்.எட். போன்ற மேற்படிப்பு படிக்கின்றனர் .நான் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன், தமிழ் மீடியத்தில் தான் படித்தேன். என்னோடு படித்தவர்கள் பலர் தொழில் செய்து முன்னேறி உள்ளனர். சிலர் படித்து உயர் பதவியில் உள்ளனர். இதற்கெல்லாம், காரணம் கடின உழைப்பும், படிப்பும் தான் பல பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளனர். அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இன்னும் படிப்பறிவு இல்லாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.நீங்கள் எந்த தொழில் செய்தாலும், எந்த வேலைக்கு சென்றாலும் அந்த துறை சார்ந்த திறமையை வளர்த்துக் கொண்டால் முன்னேறுவது நிச்சயம். இவ்வாறு பேசினார்சுத்த சன்மார்க்க சங்க உறுப்பினர் ராஜா வெங்கடேசன், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.