உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமையல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

சமையல் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை

புவனகிரி: புவனகிரி அருகே சமையல் தொழிலாளி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புவனகிரி அடுத்த பு.சித்தேரி - வடுவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்ராஜ், 22; திருமணமாகாதவர். சமையல் தொழிலாளி. சமீபத்தில் உடல் நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் அப்பகுதி வயலில் உள்ள மரத்தில் துாக்கு போட்டுக் கொண்டார்.உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அருண்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். தகவலறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உடலை வேனில் ஏற்ற முயன்றனர். அதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட நேர இழுபறிக்குப் பின் போலீசார், நேற்று காலை உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை