உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தர்மநல்லுார் எரியில் விழல்கள் எரிந்து சேதம்

தர்மநல்லுார் எரியில் விழல்கள் எரிந்து சேதம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த தர்மநல்லுார் பூலாஞ்சி ஏரியில், விழல்கள் எரிந்து சேதமாகியுள்ளது.சேத்தியாத்தோப்பு அடுத்த தர்மநல்லுார் கிராமத்தில் விருத்தாசலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூலாஞ்சி ஏரி 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியில் மீன் குத்தகை, விழல் குத்தகை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை வருவாய்த்துறையில் கிராம கணக்கில் வைத்து பராமரித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏல குத்தகை நடைபெறாத நிலையில் பொதுப்பணித்துறைக்கு தெரியாமல் விழல்களை ஒரு சிலர் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் விழலுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் ஏரியில் இருந்த விழல்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. அத்துடன் நாட்டு கருவை மரங்களும் எரிந்து வீணாகியுள்ளது. ஆண்டிற்கு பல ஆயிரம் ரூபாய் அரசுக்கு வருவாய் தரக்கூடிய விழல்கள் முற்றிலும் எரிந்து இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து விழல்கள் எரிந்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்ய அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை