உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி.,யில் இளைஞர்களுக்கு வேலை தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி

என்.எல்.சி.,யில் இளைஞர்களுக்கு வேலை தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி

கடலுார் : கடலுார் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் ஓட்டு சேகரித்தார். கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து, குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருவந்திபுரம், கே.என்.பேட்டை, கேப்பர் மலை பகுதிகளில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கடலுார் தி.மு.க., எம்.பி., ரமேஷ் எங்கு இருக்கிறார் என்றே தெரிவியவில்லை. எளிமையான உள்ளூர் நபரான சிவக்கொழுந்தை எப்போது, வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவருக்கு முரசு சின்னத்தில் ஓட்டுளியுங்கள் என்றார்.வேட்பாளர் சிவக்கொழுந்து பேசுகையில், ' நான் வெற்றி பெற்றால் என்.எல்.சி.,யில் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், நிலம், வீடு வழங்கிவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற பாடுபடுவேன்' என்றார். அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் வினோத், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மோகன், மாணவரணி சஞ்சீவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமலைவாசன், ஊராட்சி தலைவர் ஸ்ரீராம், முன்னாள் ஊராட்சி தலைவர் அருள், சுப்ரமணி, ஊராட்சி செயலாளர் ரமேஷ், ஜெ., பேரவை மாவட்ட இணை செயலாளர் சேகர், ஒன்றிய பொருளாளர் சீதாராமன், கிளை செயலாளர்கள் ரவிக்குமார், முருகன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தொகுதி பொறுப்பாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் ராஜ், ஒன்றிய செயலாளர் குமரேசன், ஒன்றியக்குழு துணை சேர்மன் அய்யனார், சரவணன், ஒன்றிய துணை செயலாளர் கோபால்ராம், மாநில பொதுக்குழு வைத்தியநாதன், ஒன்றிய நிர்வாகிகள் முருகன், குணசேகரன், ஆனந்தராஜ், சத்தியமூர்த்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை