உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்கட்டண உயர்வு கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் 

மின்கட்டண உயர்வு கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் 

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் தே.மு.தி.க., சார்பில், மின் கட்டண உயர்வை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையில்லாமல் வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ராஜிவ் சிலை அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பாலு, பானுசந்தர், இளவரசன், கிருஷ்ணராஜ், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாலு, குமரேசன் வரவேற்றனர்.கலை இலக்கிய அணி மாநில துணை செயலாளர் பிரசன்னா கண்டன உரையாற்றினார். மாவட்ட சார்பு அணி ராஜாதுரை, அறிவழகன், செல்வக்குமார், அந்தோணிஜோசப், புஷ்பராஜ், மயில்வாகணன், சந்திர குமார், நிதீஷ்குமார், அசோக்ராஜ் பட்டுசாமி, வெற்றிவேல், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை