உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இணைய வழி தடுப்பு காவலில் ஈரோடு வாலிபர் கைது 

இணைய வழி தடுப்பு காவலில் ஈரோடு வாலிபர் கைது 

கடலுார் : பண்ருட்டி, எல்.என்.புரத்தை சேர்ந்தவர் இந்துமதி. இவரிடம் மொபைல் போனில் பேசிய மர்ம நபர் ஒரு லட்சம் ரூபாய் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறினார். பின், இந்துமதியின் விவரங்களை பெற்று வங்கிக் கணக்கில் ரூ.20 ஆயிரம் இருப்பு வைக்குமாறு கூறி, பணம் மோசடி செய்தார். இதேபோன்று, பரங்கிப்பேட்டை அப்துல் அஜிஸ் மகன் சுமையாஜெய்புன்,22; என்பவரிடம் 87 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் மோசடி செய்தார்.கடலுார் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தை சேர்ந்த குமரேசன், 33; என்பவரை கடந்த ஏப்., 15ம் தேதி கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவரது மோசடி நடவடிக்கை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி,. ராஜாராம் பரிந்துரையை ஏற்று, குமரேசனை இணைய வழி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள குமரேசனிடம் சைபர் கிரைம் போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை