| ADDED : ஜூலை 09, 2024 05:56 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு துணை வேளாண் விரிவாக்க மையத்தில் குறுவை நெல் சாகுபடி இயந்திர நடவு பின்னேற்ப மானியத்திற்கான விண்ணப்பம் பதிவேற்றத்தை வேளாண் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குறுவட்ட பகுதியில் குறுவை நெல் சாகுபடி இயந்திர நடவிற்கான பின்னேற்ப மானியத்திற்காக விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று பதிவேற்றம் நடந்து வருகிறது.இந்த பகுதிக்கு கடலுாரிலிருந்து ஆய்விற்கு வந்த வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமது நிஜாம் ஆகியோர் சேத்தியாத்தோப்பு வேளாண் துணை விரிவாக்க மையத்தில் ஆய்வு செய்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்த விவசாயிகளிடம் குறுவை சாகுபடி திட்டங்கள் குறித்த விவரங்களை கூறி ஆலோசனைகளை வழங்கினர்.வேளாண் அலுவலர் ஜெயந்தி, உதவி வேளாண் அலுவலர்கள் செந்தில், சந்திரசேகர், குறுவை சாகுபடி செய்த முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.