உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார், சிதம்பரம் அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

கடலுார், சிதம்பரம் அஞ்சலகங்களில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

கடலுார் : கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பு:கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் சேவையை வழங்கி வருகிறது. கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சலகங்களில் காலை 8:00 முதல் இரவு 8:00 வரை ஆதார் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களின் தேவையை கருத்தில் கொண்டு கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.ஆதாரில் திருத்தம் செய்வதற்கு ரூ. 50, ஆதார் புதுப்பிக்க ரூ. 100 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுப்பதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. எனவே இச்சேவையை பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை