| ADDED : ஆக 13, 2024 05:53 AM
சேத்தியாத்தோப்பு: கீரப்பாளையம் வட்டாரத்தில், தமிழக முதல்வரின் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், தக்கை பூண்டு விதைப்பு வயல்களை சென்னை வேளாண் இயக்குனரக துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.கீரப்பாளையம் அருகே மணக்குடையான் இருப்பு கிராமத்தில், மண்ணுயிர்காப்போம் திட்டத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் தக்கை பூண்டு விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வயல்களை சென்னை வேளாண் இயக்குனரக துணை இயக்குனர் கலா ஆய்வு செய்தார். பின்பு விவசாயிகளிடம் நிலங்களில் தக்கை பூண்டு விதைப்பு செய்வதால் காற்றோட்டம், நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும் என்றும், 45 நாட்களில் மடக்கி உழவு செய்தால் உவர்ப்பு, கலர் தன்மை மாற்றம் ஏற்பட்டு மண் நன்கு வளம் பெறும் என தெரிவித்தார்.கடலுார் வேளாண் துணை இயக்குனர் பிரேம்சாந்தி, உதவி இயக்குனர்கள் கீரப்பாளையம் அமிர்தராஜ், பண்ருட்டி பார்த்தசாரதி, பரங்கிப்பேட்டை நந்தினி, அலுவலர் சிவப்பிரியன், உதவி வேளாண் அலுவலர் திவாகர் மற்றும் உடனிருந்தனர்.