உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காஸ் சிலிண்டர் ஏஜன்சி அலுவலகத்தில் தீ விபத்து

காஸ் சிலிண்டர் ஏஜன்சி அலுவலகத்தில் தீ விபத்து

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சமையல் காஸ் சிலிண்டர் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து சேதமானது.விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையில், மார்க்கெட் எதிரே, இண்டேன் சமையல் காஸ் நிறுவன ஏஜென்சி அலுவலகம் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களின் அனைத்து ஆவணங்களும் இந்த அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வழக்கம்போல் அலுவலக பணிகளை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அலுவலகத்தின் உள்ளே இருந்து புகை வந்துள்ளது. இதனைகண்ட பொதுமக்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பன்னீர் செல்வம், சிறப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய வீரர்கள், அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று தீயை அணைத்தனர். இதில், அலுவலகத்தின் இருந்த 5 கம்ப்யூட்டர், ஏ.சி., மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து வீணாகியது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை