உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கடலுார்: கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், துறைமுகத்தில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர்.வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக ஏற்பட்டது. பின்னர் வடமேற்கு திசையில் புயலாக நகரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதனால் கடலுார் துறைமுக்தில் நேற்று முன்தினம் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.புயல் எச்சரிக்கை காரணமாக வங்கக்கடல் பகுதியில் கடல் காற்று அதிகமாக இருக்கும் என்பதால், கடலுார் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.அதையொட்டி, கடலுார் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ