உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருத்துவமனை சூறை: 4 பே ருக்கு போலீஸ் வலை

மருத்துவமனை சூறை: 4 பே ருக்கு போலீஸ் வலை

விருத்தாசலம் : விருத்தாசலம் வீரபாண்டியன் தெரு மாரியம்மன் கோவில் திருவிழாவில், அப்பகுதியை சேர்ந்த இளையராஜா, ஜெயராஜ் தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது. அதில் காயமடைந்த இளையராஜா சகோதரர் செல்வமணி நேற்று முன்தினம் இரவு, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.அவரை பின்தொடர்ந்து சென்ற ஜெயராஜ் தரப்பினர், அங்கேயும் அவரை தாக்க முயன்றனர். அப்போது, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கதவின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.இது குறித்து அரசு மருத்துவமனை முதன்மை குடிமையியல் மருத்துவர் சாமிநாதன் புகாரின் பேரில், ஜெயராஜ், அவரது மகன்கள் பரத், ஜெகன், ஜெகன் மகன் அப்பு ஆகிய நால்வர் மீது விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து, தலைமறைவான நால்வரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை