உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்

வேப்பூர் : வேப்பூர் அருகே அ.தி.மு.க., புதிய உறுப்பினர் அட்டைகளை மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் வழங்கினார்.நல்லுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஏ.சித்தூரில் நடந்தது. நல்லூர் தெற்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பங்கேற்று, புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கினார்.அப்போது, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஜெ., பேரவை மாநில துணை செயலர் அருளழகன், நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, ஒன்றிய பொருளாளர் முத்துக்கருப்பன், முன்னாள் ஊராட்சி செயலர் காந்தி உடனிருந்தனர். இதேபோன்று, சாத்தியம் கிராமத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை