உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் ஜமாபந்தி நிறைவு 73 மனுக்களுக்கு உடனடி தீர்வு

சிதம்பரத்தில் ஜமாபந்தி நிறைவு 73 மனுக்களுக்கு உடனடி தீர்வு

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த, ஜமாபந்தி நிறைவு நாளில், சப் கலெக்டர் ராஷ்மிராணி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தினார். சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில், கடந்த 11ஆம் தேதி ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) துவங்கியது. சிதம்பரம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்கள், பிர்க்கா வாரியாக, பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வருவாய் துறை சார்ந்த தங்களது கோரிக்கை குறித்து மனுக்களை அளித்து வந்தனர். நேற்று ஜமாபந்தி நிறைவு நாள் விழா நடந்தது. தாசில்தார் ஹேமாஆனந்தி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் பிரகாஷ், துணை தாசில்தார் விக்டோரியா, வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி பங்கேற்று, பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று, விசாரணை மேற்கொண்டார். நிறைவு நாளான நேற்று மட்டும், அனைத்து வருவாய் கிராமங்களில் இருந்தும், அதிக அளவாக, 373 மனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜமாபந்தியில், இதுவரை ஆயிரத்து 188 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 40 மனுக்கள் இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 73 மனுக்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் 20 பேருக்கு சப்டிவிஷன் பட்டா மாற்ற செய்து, சப் கலெக்டர் ராஷ்மிராணி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை