உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

லட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கடலுார்: கடலுார், முதுநகர் லட்சுமி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.கடலுார், முதுநகர் லட்சுமி மெட்ரிக் பள்ளியில் 102 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 101 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99 ஆகும். பள்ளியில், 450 மதிப்பெண்ணுக்கு மேல் 18 பேர், 400 முதல் 449 வரை 29 பேர், 350 முதல் 399 வரை 32 பேர், 300 முதல் 349 வரை 13 பேர் மதிப்பெண் பெற்றனர். பாட வாரியாக தமிழில் 37 பேர், ஆங்கிலத்தில் 15 பேர், கணிதத்தில் 34 பேர், அறிவியலில் 30, சமூக அறிவியலில் 19 பேர், 90க்கு மதிப்பெண் பெற்றனர்.தேர்வில் 475 க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி நிறுவனர் முத்துக்குமார், முதல்வர் புவனேஸ்வரி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை